No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |
கும்பகோணம்


.
kumbakonam classifieds
Life style

கும்பகோணம் அறிவியல்

‘கேள்வி கேட்பதே அறிவியலின் திறவுகோலாகும்

‘கேள்வி கேட்பதே அறிவியலின் திறவுகோலாகும்’

மாற்றமும், வளர்ச்சியும் காலத்தின் நியதி. கலை, கலாசாரம், ஆன்மீகத்துறை, உணவுமுறை, கல்வி என எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் உண்டதை நாம் இப்பொழுது உண்பதில்லை, உடுத்ததை உடுப்பதில்லை, படித்ததை இப்பொழுது படிப்பதில்லை. காலத்தோடு மாறுகிறோம். மாற்றம் எதிலும் நியதி. அதிலும் முக்கியமாக அறிவியலில் மாற்றமும் வளர்ச்சியும் அத்தியாவசியமானவை. அறிவியலின் அடிப்படையே அதுதான். அறிவியல் எதையும் முற்றுமுழுதாக சரியென ஏற்றுக் கொள்வதில்லை எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் சந்தேகிப்பவன்தான் விஞ்ஞானி.

முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஆராய்ச்சி மூலமாக பிழையென நிறுவி புதிய கருத்தை முன்வைப்பவன் அவன். முன்னோர் சொன்னதெல்லாம் சரி, அவற்றை கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பவன் விஞ்ஞானியாக இருக்க முடியாது.

அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிபடையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (techniques) ஆகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். அவதானிக்கப்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அவ்வாதாரங்கள் பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

                                     தற்கால அறிவியல் சூழலில் அறிவைப் பெற, வளர்க்க ஆய்வு முக்கியம். அறிவியல் அணுகுமுறையில் ஆய்வு செய்வது ஒரு சிறந்த வழிமுறை. அதைத் தமிழில் செய்ய, தமிழுக்கு ஆயுவுத் திறன் தேவை.எல்லா மொழிகளும் இயல்பாகவே ஆய்வுத் திறன் பெறுவதில்லை. அதற்குரிய மொழித் திறனும், அந்த மொழியில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைப் புலமும் தேவை. ஆய்வு திறன் இல்லாத மொழியில் ஆய்வு ரீதியில் சிந்தனை செய்யவோ சிந்தனைகளை வெளிப்படுத்தவோ முடியாது. அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத் திறனை வளர்த்துப் பயன்படுத்த முடியும்.