No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |

நவக்கிரக பாடல்கள் தொகுப்பு -1:

சூரிய பகவான்

 

Imageகாசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்
வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

 

More

 

சந்திர பகவான்

 

Imageஅலைகடல் அதனில் நின்று அன்று வந்துதித்தபோது
கலை வளர் திங்களாகிக் கடவுள் என்று எவரும் ஏத்தும்
சிலைநுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலை வலமாக வந்த மதியமே போற்றி ! போற்றி !

 

More

 

செவ்வாய் பகவான்

 

Imageவசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீணிலம் தனிலளிக்கும்
குசனின் மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

 

More

 

புதன் பகவான்

 

Image

மதன நூல் முதலாவுள்ள மறை புகழ் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லன்
புதன் கவிப் புலவன் சீர்சால் பொன்னடி போற்றி! போற்றி!

 

More

 

குரு பகவான்

 

Imageமறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நறைசொரி கற்பகம் பொன்னாட்டினுக்கதிபதினாகி
நிறைதினம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி

 

More

 

சுக்கிர பகவான்

 

Imageமூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழை பெய்விக்கும் கவி மகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமையெழுப்பும்
பார்க்கவான் சுக்ராச்சாரி பாத பங்கயமே போற்றி !

 

More

 

சனீஸ்வர பகவான்

 

Imageமுனிவர் தேவரேழு மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு மகிமையல்லாதுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கருள் செய்வாயே !

 

More

 

ராகு பகவான்

 

Imageவாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !

 

More

 

கேது பகவான்

 

Imageமாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து
கோதுகள் யாவும் தீரக்குருவருள் பாதம் போற்றி
தீதுகள் யாவும் தீர்க்கும் சிவன்கையில் சிரமே பெற்ற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே !

 

More