No:1 classifieds Website in kumbakonam, For Advertisements Call: 94447 21150 Follow us on Home | Feedback | About us | Contact us
  • ....  LOW CAST WEBSITE WITH HIGH PERFOMENCE ....
  • .... Mobile Responsive.....
  • NO ANY HIDDEN CHARGES
  • Choose your Plan
wow slider by WOWSlider.com v8.7
வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150.வணக்கம் .கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் முகவரிகளை இத்தளத்தில் இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.விளம்பரங்களுக்கும் விபரங்களுக்கும் கைபேசி எண்- 9444721150. |

காமராசர்

css template

காமராசர்
பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலையில் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். பின் தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார். அதை தொடர்ந்து பல போராட்டங்களில் கலந்துக் கொண்ட காமராசர் 1954ம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார்.

கல்வியில் அவர் செய்த புரட்சி அளவிட முடியாதது......அவற்றில் சில

ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும் என்று கூறினார் காமராசர். 56 ஆண்டுகளுக்கு முன் ஏழையின் வீட்டை நாடி கல்வியைப் போக செய்தார் காமராசர். கல்வியில் சிறந்தது தமிழ்நாடு. அதைத் தமிழனுக்குச் சிறந்த, உரிய முறையில் அளித்த கல்வி வள்ளல்தான் காமராசர்.

1954-ம் ஆண்டு டிசம்பரில் தொடக்கக் கல்வியின் நிலையினை அறிந்து கொள்வதற்காக அரசு ஓர் உயர்நிலைக் குழுவை டாக்டர் அழகப்பச் செட்டியார் தலைமையில் நியமித்தது. அன்றை தமிழகத்தில் தொடக்கக் கல்வியின் நிலை எப்படி? போதி பள்ளிகள் உள்ளனவா? பள்ளிகளின் நிலை எப்படி? எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் போதவில்லை? இப்படிப்பட்ட குறைகளை களைவதற்காக வழி வகை என்ன? தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் தகுதி, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டிற்கான வழி? ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர வழி? ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம் ஆகியவற்றைப் பற்றிய பரிந்துறைகளைத் தெரிவிக்க தொடக்கக் கல்வி குழுவை, காமராசர் அரசு நியமித்தது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, 1955ம் ஆண்டு அக்டோபரில் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம்:

தொடக்கக் கல்விக்கு, உயர்நிலைக்குழு அளிக்கும் பரிந்துரைக்குப் பின்னர் கல்விக்கான திட்டங்களை தீட்டலாம் என காமராசர் அரசு எண்ணவில்லை. மாறாக, காமராசர் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வியாண்டில் இயன்ற அளவு தொடக்கக் கல்விகள் திறந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளி தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அரசிற்கு நிதி ஏதும் கட்டணமாக அளித்திட தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடம் திறப்பதற்காக யாரும் எந்த அதிகாரியையும் தேடியும் போக வேண்டாம்.

அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம் 500 பேர் வாழும் சிற்றூர்கள் உள்ளதோ அங்கெல்லாம் அதிகாரிகளே சென்றனர். ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு பள்ளி வருமாறும் அமைக்கப்பட்டன. ஊரில் இருந்த மக்களிடத்தில் கல்வி மேம்பாடு பற்றி எடுத்து சொல்லப்பட்டது. மக்கள் ஊக்குவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டு, அங்கே பள்ளிக்கூடம் தொடங்கி வைக்கப்பட்டது.

உடன் வரும் ஆசிரியர்களில் அந்தச் சிற்றூர் பள்ளி ஆசிரியரும் அங்கேயே அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பள்ளிக்குரிய கரும்பலகைகள், மேசை நாற்காலிகள், பதிவேடுகள் முதலியவையும் அதே நேரத்தில் வழங்கப்பட்டது. பள்ளி செயல்படுவதற்குரிய வகையில் முறைப்படுத்தப் பட்டவுடன், அந்தக் குழு அடுத்த சிற்றூரை நோக்கி செல்லும்.

இப்படி பள்ளிகள் துவக்கப்பட்டதற்கு அந்த காலத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆட்சிக் குழுக்களும் உரிய முறையில் ஒத்துழைத்தன. உத்வேகமும் உணர்வும் கொண்ட காமராஜரின் எண்ண வேகத்திற்கு ஏற்ப அதே உணர்வுடன் செயல்பட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடாக பாடுபட்டனர்.

கட்டாயக் கல்வி தொடக்கம்:

1960-61ம் ஆண்டில் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில் 6 லிருந்து 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1961-62ம் ஆண்டில், மாநிலத்தின் இன்னொரு மூன்றில் ஒரு பகுதியில் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1962ம் ஆண்டில் மீதமிருந்த ஒரு பகுதியிலும் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆசிரியர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான மூன்று நலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1955 முதல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 1958 முதல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுக்கான ஊதியம் இவற்றுடன் இணைந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்ற மூன்று திட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் அளிக்கப்பட்டது. ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 55யிலிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது.

இலவசக் கல்வி தொடக்கம்:

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லாக் கல்வி சலுகைகளையும் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கும், அதே போன்று தாழ்த்தப்பட்ட பிரிவாக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து காமராசர் அரசு ஆணையிட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்கு இலவச கல்வி உள்பட பல சலுகைகள் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தொழிற்கல்வி, பொது நூலகம், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் என காமராசர் ஆட்சியில் இருக்கும் போது கல்விக்கென பல திட்டங்களை கொண்டு வந்தார்.

இவ்வாறு, கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை காமராசர் அரசு மேற்கொண்டது. காமராசரின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். இவர் நம்மை விட்டு மறைந்தாலும் இவர் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களும், புரட்சிகளும் நம் நினைவை விட்டு என்றும் அகலாது.

Category: கல்வி
NEWS UPDATED N0V29, 2014

Top News

2016 ல் வரும் மகாமகத்தை வரவேற்க தயாராகுது கும்பகோணம்.வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்த கும்பகோணம் நகராட்சி துரிதமாக அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது ,

காமராசர்
பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலையில் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். பின் தேசத் தலைவர்களின்.........
  • CSS Templates